ADDED : அக் 07, 2011 01:07 AM
காஞ்சிபுரம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர், காஞ்சிபுரத்தில், தர்ணா போராட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம் காவலான்கேட் அருகே நடந்த தர்ணா போராட்டத்திற்கு, சங்க தலைவர் ராஜாபாதர், தலைமை தாங்கினார். மத்திய மாநில பொதுத்துறை ஊழியர் சம்மேளனத் தலைவர் சாரங்கன், போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். டாசா மாநில செயலர் லெனின், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் தங்கராஜ் ஆகியோர், வாழ்த்துரை வழங்கினர். சங்க மாநில பொருளாளர் ரத்தின சுப்பிரமணியன், விலைவாசி, சமச்சீர் கல்வி, கல்விக் கட்டணம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசினார். சங்கச் செயலர் ராமச்சந்திரன் வரவேற்றார். பொருளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.


