ADDED : அக் 12, 2011 11:39 PM
கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 'வணிகமுறையிலான காய்கறி மற்றும்
பழப்பொருட்கள் தயாரித்தல்' குறித்த பயிற்சி முகாம், வரும் 19, 20 ம்
தேதிகளில் நடக்கின்றன.இருநாள் பயிற்சி முகாமில் உலரவைக்கப்பட்ட காய்கறிகள்
மற்றும் பழங்கள், பலவகை பழ ஜாம், பழரசம், ஊறுகாய், ஊறுகனி, பழபார்,
பழமிட்டாய் உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்
படுகின்றன.ஆர்வமுள்ளவர்கள் ஆயிரம் ரூபாய் செலுத்தி தங்கள் பெயரை முன்பதிவு
செய்து கொள்ளலாம்.
நேரில் வர இயலாதவர்கள் பயிற்சி கட்டணத் தொகையை வரைவோலை
மூலம் முதன்மையர், வேளாண்மை பொறியியல் கல்லூரி என்ற பெயரில் கோவையில் உள்ள
பாரத ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க வகையில் எடுத்து, பேராசிரியர் மற்றும்
தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைகழகம், கோயமுத்தூர்-641003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.வரும்
18ம் தேதி வரை பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு
0422-6611268 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.


