Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சிக்னல் பழுது: பரிதவித்தது படகு

சிக்னல் பழுது: பரிதவித்தது படகு

சிக்னல் பழுது: பரிதவித்தது படகு

சிக்னல் பழுது: பரிதவித்தது படகு

ADDED : அக் 13, 2011 06:03 AM


Google News

ராமேஸ்வரம்: சென்னையிலிருந்து புறப்பட்ட இழுவைப்படகு குஜராத் செல்வதற்காக பாம்பன் கடல் பகுதிக்கு வந்தது.பாம்பன் பாலத்தை கடந்து செல்ல துறைமுக அதிகாரிகள் அனுமதி தந்தனர்.

ஆனால், பாம்பன் ரயில் பாலத்தில் சிக்னல் வேலை செய்யவில்லை. ரயில் பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்காக திறக்கப்படும் 'ஸ்கெர்ஜர்' என்ற சுழல் தூக்கு பயன்படுத்தப்படுகிறது. மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் ஒரே நேரத்தில் சாவிகளை பயன்படுத்தினால் தான் சிக்னல் கிடைக்கும். பாலத்தின் இரு பகுதிகளும் தூக்கப்பட்டு கப்பல்கள் செல்ல முடியும். நேற்று இந்த சிக்னல் செயல்படவில்லை. இதனால் இழுவைப்படகு, பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நிறுத்தபட்டது. சிக்னலை சரி செய்யும் முயற்சியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us