Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/"எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் ஊரை சுற்றும் அரசு பஸ்கள்

"எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் ஊரை சுற்றும் அரசு பஸ்கள்

"எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் ஊரை சுற்றும் அரசு பஸ்கள்

"எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் ஊரை சுற்றும் அரசு பஸ்கள்

ADDED : ஜூலை 25, 2011 01:54 AM


Google News
காஞ்சிபுரத்திலிருந்து, சென்னைக்கு இயக்கப்படும், 'எக்ஸ்பிரஸ்' பஸ்களை, ஆல் பை - பாஸ் பஸ்களாக இயக்க வேண்டுமென, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து, சென்னை கோயம்பேட்டிற்கு தினமும், 70 க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர ஆரணி, செய்யார், வந்தவாசி பகுதிகளில் இருந்து, சென்னைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களும் காஞ்சிபுரம் வந்து தான் செல்கின்றன.காஞ்சிபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை சார்பில், தடம் எண். 76பி, 76சி ஆகிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு செல்ல, இந்த பஸ்களில், 23 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.இந்த பஸ்கள் சுங்குவார்சத்திரம், ஸ்ரீ பெரும்புதூர், பூந்தமல்லி வழியாக, கோயம்பேடுக்கு இயக்கப்பட்டன. பின், திடீரென, மேற்கண்ட அனைத்து பஸ்களும், 'எக்ஸ்பிரஸ்' பஸ்களாக மாற்றப்பட்டு, கட்டணம், 26 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதற்கு பயணிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்படும் பஸ்கள், குறிப்பிட்ட இடத்தில் தான் நின்று செல்லும். எனவே தான் கட்டணத்தை உயர்த்தியுள்ளோம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விளக்கமளித்தனர். ஆனால், கட்டணம் உயர்த்தப்பட்ட அனைத்து பஸ்களும், பை - பாஸ் வழியாக இயக்காமல், சுங்குவார்சத்திரம், ஸ்ரீ பெரும்புதூர் உள்ளே சென்று வருவதால், பயண நேரம் அதிகரிக்கிறது.இது குறித்து, காஞ்சிபுரம் அரசு போக்குவரத்துக் கழக வணிகப் பிரிவு உதவிப் பொறியாளர் குணசேகரன் கூறும்போது, ''இது தொடர்பான புகார்கள் வரத் துவங்கியதும், ஆல் பை - பாஸ் என்ற பெயரில் சென்னைக்கு, 10 பஸ்களை இயக்கி வருகிறோம்.

இந்த பஸ்கள், சுங்குவார்சத்திரம், ஸ்ரீ பெரும்புதூர் ஆகிய ஊர்களுக்குள் செல்லாது. விரைவாக செல்ல விரும்பும் பயணிகள் இந்த பஸ்களில் பயணம் செய்யலாம்'' என்றார்.பயண நேரம் அதிகரிப்புகாஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்குச் செல்லும் அரசு பஸ்கள், சுங்குவார்சத்திரம், ஸ்ரீ பெரும்புதூர் உள்ளே சென்று வருதால், பயண நேரம் 20 நிமிடங்கள் கூடுதலாகிறது. இதனால் வேலைக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் நேரத்துடன் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே, எக்ஸ்பிரஸ் பஸ்களை, 'ஆல் பை-பாஸ் பஸ்'களாக இயக்கினால், பயண நேரம் குறையும். சுங்குவார்சத்திரம், ஸ்ரீ பெரும்புதூர் ஆகிய பகுதி பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, சாதாரண பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும்.'எங்களிடம் பேசி பயனில்லை'தினமும் காலை நேரத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்கள் சுங்குவார்சத்திரம், ஸ்ரீ பெரும்புதூருக்குள் செல்லும்போது, பயணிகள், கண்டக்டர், டிரைவரிடம், 'எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலித்துக்கொண்டு ஊரை சுற்றிக்கொண்டு போகக்கூடாது என வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர்.அதற்கு நாங்கள் என்ன செய்வது அதிகாரிகள் சொல்வதுபோல் பஸ்சை இயக்குகிறோம். இது தொடர்பாக உயரதிகாரிகளிடம் தான் முறையிட வேண்டும், எங்களிடம் பேசி பயனில்லை என அவர்கள் பதிலளிக்கின்றனர்.

நா.குணாளன்/காஞ்சிபுரம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us