பொறியியல் கவுன்சிலிங்கில் 43 ஆயிரம் இடங்கள் நிரம்பின
பொறியியல் கவுன்சிலிங்கில் 43 ஆயிரம் இடங்கள் நிரம்பின
பொறியியல் கவுன்சிலிங்கில் 43 ஆயிரம் இடங்கள் நிரம்பின
ADDED : ஜூலை 26, 2011 12:46 AM
சென்னை : பொறியியல் கவுன்சிலிங்கில், நேற்றுடன் 43 ஆயிரத்து 391 இடங்கள் நிரம்பியுள்ளன.
இன்னும், 1 லட்சத்து 3,255 இடங்கள் காலியாக உள்ளன. கடந்த 8ம் தேதி பொதுப்பிரிவு கவுன்சிலிங் துவங்கியது. நேற்று வரை நடந்த 18 நாட்கள் கவுன்சிலிங்கில், 43 ஆயிரத்து 391 இடங்கள் நிரம்பியுள்ளன. இடங்களை தேர்வு செய்தவர்களில், 22 ஆயிரத்து 568 பேர் மாணவர்கள்; 20 ஆயிரத்து 823 பேர் மாணவியர். சிவில் பிரிவில் 3,498 இடங்கள், இ.இ.இ., பிரிவில் 5,155 இடங்கள், இ.சி.இ., பிரிவில் 10 ஆயிரத்து 802 இடங்கள் நிரம்பியுள்ளன.
மேலும், மெக்கானிக்கல் பிரிவில் 7,851 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 6,907 இடங்களும் நிரம்பியுள்ளன. மொத்தம் உள்ள 1 லட்சத்து 46 ஆயிரத்து 610 இடங்களில், 43 ஆயிரத்து 391 இடங்கள் நிரம்பியது போக, இன்னும் 1 லட்சத்து 3,255 இடங்கள் காலியாக உள்ளன. நேற்று வரை 10 ஆயிரத்து 246 மாணவர்கள், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.
பிரிவு வாரியான ஒதுக்கீடு: ஓ.சி., பிரிவில் 19 ஆயிரத்து 173 பேர், பி.சி.எம்., பிரிவில் 1,315 பேர், பி.சி., பிரிவில் 12 ஆயிரத்து 139 பேர், எம்.பி.சி., பிரிவில் 7,832 பேர், எஸ்.சி.ஏ., பிரிவில் 258 பேர், எஸ்.சி., பிரிவில் 2,581 பேர் மற்றும் எஸ்.டி., பிரிவில் 57 பேர் பொறியியல் இடங்களை தேர்வு செய்துள்ளனர். எப்.ஓ.சி., பிரிவில் 36 பேர் சேர்ந்துள்ளனர்.