/உள்ளூர் செய்திகள்/மதுரை/யார் போலீஸ் வேனில் செல்வது?எஸ்.ஐ.,களுக்குள் பனிப்போர்யார் போலீஸ் வேனில் செல்வது?எஸ்.ஐ.,களுக்குள் பனிப்போர்
யார் போலீஸ் வேனில் செல்வது?எஸ்.ஐ.,களுக்குள் பனிப்போர்
யார் போலீஸ் வேனில் செல்வது?எஸ்.ஐ.,களுக்குள் பனிப்போர்
யார் போலீஸ் வேனில் செல்வது?எஸ்.ஐ.,களுக்குள் பனிப்போர்
ADDED : ஆக 01, 2011 02:04 AM
மதுரை:மதுரையில் இருந்து கைதிகளை வெளியூர் அழைத்துச் செல்லும்போது, போலீஸ்
வேனில் யார் உடன் செல்வது என்பதில், நகர் ஆயுதப்படை நேரடி
எஸ்.ஐ.,க்களுக்கும், சிறப்பு எஸ்.ஐ.,க்களுக்கும் இடையே பனிப்போர்
நடக்கிறது.இங்கு 40 எஸ்.ஐ.,க்கள் பணிபுரிகின்றனர். கைதிகளை கோர்ட்டிற்கும்,
சிறைக்கும் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது இவர்களது பணி. சுழற்சி முறையில்
எஸ்.ஐ.,க்களுக்கு 'எஸ்கார்டு' பணி வழங்கப்படும். இந்நிலையில்,
வெளியூர்களுக்கு கைதிகளை போலீஸ் வேனில் அழைத்துச் செல்ல நேரடி
எஸ்.ஐ.,க்களுக்கு மட்டுமே பணி ஒதுக்கப்படுவதாக அதிகாரிகளிடம் சிறப்பு
எஸ்.ஐ.,க்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை
நடக்கிறது. அவர்கள் கூறுகையில், ''அரசு பஸ்சில் கைதிகளை அழைத்துச் செல்ல
மட்டும் எங்களை அனுப்புகின்றனர். இதனால் ஒவ்வொரு முறையும் 'ரிஸ்க்' எடுத்து
அழைத்து செல்ல வேண்டியுள்ளது. சில சமயம், கைதிகள் தப்பி ஓடிவிடுகின்றனர்.
தவிர, சொந்த செலவில்தான் நாங்கள் சென்று வரவேண்டியுள்ளது. இதற்குரிய
பயணப்படி தொகையையும் உடனடியாக வழங்குவதில்லை. நேரடி எஸ்.ஐ.,க்களுக்கு
காட்டும் சலுகை போல், எங்களுக்கும் சலுகை காட்ட வேண்டும்,'' என்றனர்.