/உள்ளூர் செய்திகள்/சேலம்/அரசு பஸ் - டிப்பர் லாரி மோதல் பெண் பலி; 15 பேர் படுகாயம்அரசு பஸ் - டிப்பர் லாரி மோதல் பெண் பலி; 15 பேர் படுகாயம்
அரசு பஸ் - டிப்பர் லாரி மோதல் பெண் பலி; 15 பேர் படுகாயம்
அரசு பஸ் - டிப்பர் லாரி மோதல் பெண் பலி; 15 பேர் படுகாயம்
அரசு பஸ் - டிப்பர் லாரி மோதல் பெண் பலி; 15 பேர் படுகாயம்
ADDED : ஆக 01, 2011 04:10 AM
சங்ககிரி: சங்ககிரி அருகே டிப்பர் லாரி மீது அரசு பஸ் மோதியதில், பெண்
ஒருவர் பலியானார்.
15 பேர் படுகாயமடைந்தனர்.நேற்று காலை, கோவையில் இருந்து
சேலம் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. எலச்சிப்பாளையத்தைச்
சேர்ந்த திருஞானசுந்தரம்(54) என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். சங்ககிரி,
மங்கரம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த
டிப்பர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.இந்த விபத்தில், பஸ்சில்
இருந்த பாப்பிரெட்டிப்பட்டி, செங்காட்டுபுதூரைச் சேர்ந்த மேகவாணி(24) என்ற
பெண் பரிதாபமாக பலியானார். மேலும், ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த திவ்யா,
பொள்ளாச்சியைச் சேர்ந்த ஹருன்ரஷீத் ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில், ஈரோடு
அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.தர்மபுரி, சேலம், விழுப்புரம்,
கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 13 பேர் படுகாயங்களுடன், அரசு
மற்றும் தனியார் மருத்துவனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து,
சங்ககிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.