/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சத்துணவு பணியாளர் குடும்பத்திற்கு நிதிசத்துணவு பணியாளர் குடும்பத்திற்கு நிதி
சத்துணவு பணியாளர் குடும்பத்திற்கு நிதி
சத்துணவு பணியாளர் குடும்பத்திற்கு நிதி
சத்துணவு பணியாளர் குடும்பத்திற்கு நிதி
ADDED : ஆக 09, 2011 02:45 AM
செஞ்சி : பணியின் போது இறந்த சத்துணவு பொறுப் பாளரின் குடும்பத்திற்கு அரசு நிதி வழங்கப்பட்டது.செஞ்சி ஒன்றியம் ஆலம்பூண்டி அரசு மேல்நிலை பள்ளி சத்துணவு மைய பொறுப்பாளராக பணிபுரிந்த தண்டபாணி பணிக் காலத்தில் இறந்தார்.
இவரது குடும்பத் திற்கு பாதுகாப்பு நிதி 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. தண்டபாணியின் வாரிசுகள் ராணி, அமுதா, ஆனந்தன், அர்ச்சனா, அருண்பாண்டியன், ரத்தினாம்மாள் ஆகியோருக்கு தலா 24 ஆயிரத்து 165 ரூபாய் வீதம் ஒன்றிய சேர்மன் ரத்னா கணபதி வழங்கினார்.
நிகழ்ச்சியில் பி.டி. ஓ.,க்கள் உஷாராணி, சாந்தகுமாரி, கூடுதல் பி.டி.ஓ., தர்மலிங்கம், ஊர்நல அலவலர் ரவிக்குமார், உதவியாளர் ரவீந்திரகுமார் மற்றும் சந்திரசேகரன், கருணாகரன் உடனிருந்தனர்.


