ADDED : அக் 04, 2011 12:16 AM
திருத்துறைப்பூண்டி: வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய கொண்டு வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருத்துறைப்பூண்டி போலீஸார், நேற்று காலை 10.30 மணிக்கு பாமணி பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த டாடா கிராண்டி காரை வழி மறித்து சோதித்த போது, அதில் 650 பீர் பாட்டில்கள். 384 பிராந்தி பாட்டில்கள் இருந்ததை கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர். டிரைவர் சுத்தமல்லி பாலமுருகன்(30) என்பவரை கைது செய்து விசாரித்தபோது, மேற்படி கார், சுத்தமல்லி கோவிலூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மதன் வாக்காளர்களுக்கு சப்ளை செய் ய மது பாட்டில்களை காரைக்காலில் இருந்து வாங்கி வந்ததும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் மது பாட்டில்களின் மதிப்பு ரூ.பத்து லட்சமாகும்.


