Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி சாம்சங் குடோனில் பயங்கர தீ ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

புதுச்சேரி சாம்சங் குடோனில் பயங்கர தீ ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

புதுச்சேரி சாம்சங் குடோனில் பயங்கர தீ ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

புதுச்சேரி சாம்சங் குடோனில் பயங்கர தீ ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

ADDED : அக் 09, 2011 12:29 AM


Google News

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன.

புதுச்சேரி, பிள்ளைத்தோட்டம் திருவள்ளுவர் சாலையில் சாம்சங் நிறுவனத்தின் குடோன் உள்ளது. இங்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாஷிங்மெஷின், 'ஏசி', குளிர்சாதனப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை 2.50 மணியளவில் இந்தக் கட்டடத்தில் இருந்து புகை கிளம்பியது. இதைப் பார்த்த அப்பகுதியினர் தீயணைப்பு நிலைத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

புதுச்சேரி தீயணைப்பு நிலைய அதிகாரி ரித்தோஷ் சந்திரா தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அணைக்க முடியவில்லை.



இதையடுத்து கோரிமேடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து நிலைய அதிகாரி இளங்கோ தலைமையில் கூடுதல் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு, காலை 8.30 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தை அரசு கொறடா நேரு, முன்னாள் எம்.எல்.ஏ., சிவா, தாசில்தார் ரமேஷ் ஆகியோர் பார்வையிட்டனர். குடோனில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து சாம்பலானதாக தகவல் வெளியானது.



இதுகுறித்து தீயணைப்பு நிலைய அதிகாரி ரித்தோஷ் சந்திராவிடம் கேட்டபோது, 'கட்டடம் மற்றும் அதில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்துள்ளன. அருகில் இருந்த கடைகளுக்கும் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us