/உள்ளூர் செய்திகள்/சேலம்/வறுமையால் நாள்தோறும் 5,000 குழந்தை பலி கருத்தரங்கில் அதிகாரி அதிர்ச்சி தகவல்வறுமையால் நாள்தோறும் 5,000 குழந்தை பலி கருத்தரங்கில் அதிகாரி அதிர்ச்சி தகவல்
வறுமையால் நாள்தோறும் 5,000 குழந்தை பலி கருத்தரங்கில் அதிகாரி அதிர்ச்சி தகவல்
வறுமையால் நாள்தோறும் 5,000 குழந்தை பலி கருத்தரங்கில் அதிகாரி அதிர்ச்சி தகவல்
வறுமையால் நாள்தோறும் 5,000 குழந்தை பலி கருத்தரங்கில் அதிகாரி அதிர்ச்சி தகவல்
சேலம்: ''சர்வதேச அளவில், வறுமை காரணமாக நாள்தோறும், 5,000 குழந்தைகள் பலியாகி வருகின்றனர்.
பிரஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா இயக்குனர் முரளி முன்னிலை வகித்து பேசியதாவது: உலக அளவில், குழந்தைகளுக்கான உரிமைகள் காக்க, பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சர்வதேச அளவில், குழந்தைகளுக்கு சத்தாண உணவு, சுகாதாரம், குடிநீர், அடிப்படை வசதிகள் பெற்றிடாமல் இருக்கின்றனர். சர்வதேச அளவில், நாள்தோறும் வறுமை காரணமாக, 5,000 குழந்தைகள் பலியாகி வருகின்றனர்.
யுனிசெஃப் சார்பில் வித்யாசாகர் பேசியதாவது: இந்தியாவில், மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள், சத்தாண உணவின்றி தவித்து வருகின்றனர். 40 சதவீத வீடுகளில் மட்டுமே கழிப்பறை உள்ளதால், 60 சதவீதம் பேரின் சுகாதாரம் கேள்விக் குறியாகவே உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் அவர்கள் பெற வேண்டிய உரிமை விஷயத்தில், பத்திரிகை துறைகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு பேசினார்.
கலெக்டர் மகரபூஷணம் பேசியதாவது: சமுதாயத்துக்கு சிறந்த வழிகாட்டியாக, பத்திரிகையாளர்கள் விளங்குகின்றனர். பெற்றோர், ஆசிரியர், சுற்றுப்புறத்தார் ஏற்படுத்தி கொடுக்கும் சூழ்நிலைகளில், குழந்தைகளின் வளர்ச்சியும், எதிர்கால நலனும் அடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில், 13 ஆயிரத்து, 500 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, ஆறு பள்ளிகள் மூலம் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு, 24 குழந்தைகள், பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மாநிலம் முழுவதும், 3.6 சதவீதம் பேர் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர். சேலம் மாவட்டத்தில், 4.1 சதவீதம் பேர், குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர். குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் பெற்றோர், தொழில் நிறுவனங்கள், உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு பேசினார்.
'யுனிசெஃப்' சார்பில் சுகத்தாராய் பேசியதாவது: ஊடகங்கள், குழந்தைகளின் கவுரவம், திறமையை வெளிகாட்டுதல் வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு முழுமையான தேவைகள் கிடைப்பதில்லை. குழந்தைகளை, எதிர்கால தூண்களாக மட்டும் பார்ப்பதால், அவர்களுக்கு நிகழ் காலத்தில் கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுவதை, ஊடகங்கள் வெளிக் கொணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


