Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தனித்து போட்டியிடுவதால் மதிப்பு

தனித்து போட்டியிடுவதால் மதிப்பு

தனித்து போட்டியிடுவதால் மதிப்பு

தனித்து போட்டியிடுவதால் மதிப்பு

ADDED : அக் 12, 2011 02:59 AM


Google News
ஊட்டி : ஊட்டியில் காங்., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் முன்னாள் எம்.பி., பிரபு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதால் காங்கிரசுக்கு மதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஊட்டி நகராட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் 12 கோடி ரூபாய் மதிப்பில் குடிசை மாற்று திட்டத்தின் கீழ் ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன. ஊட்டியில் உள்ள எச்.பி.எப்., தொழிற்சாலைக்கு கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய அரசு உதவி செய்து வந்தது. இதனால், உற்பத்தி நடந்து வந்தது. 'அரசு மருத்துவ மனைகளில் இத்தொழிற்சாலையின் எக்ஸ்-ரே பிலிம்களை வாங்க கூடாது,' என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தனியாரிடம் 350 ரூபாய் கொடுத்து வாங்குகிறது. கடந்த ஆட்சியின் போது, எச்.பி.எப்., நிர்­­வா­கம் தோட்டக் கலை துறையுடன் இணைந்து மலர் சாகுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது இத்திட்டத்தையும் அரசு ரத்து செய்துள்ளது. எச்.பி.எப்.,யை மூடி விட்டு தனியாருக்கு விற்க முயற்சி செய்து வருகிறது. டிசம்பர் மாத இறுதிக்குள் ஊட்டியில் உள்ள ராஜிவ் காந்தி சிலை திறக்கப்படும். இவ்வாறு பிரபு கூறினார். பேட்டியின் போது, ஊட்டி நகராட்சி வேட்பாளர் லலிதா தனபால், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜூ, முன்னாள் நகராட்சி தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us