ADDED : அக் 07, 2011 02:17 AM
திருநெல்வேலி : நெல்லையில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை ஜங்ஷன் சி.என்.கிராமம் லட்சுமிபுரத்தை சேர்ந்த ராமையா மகன் மணிகண்டன்(34). கூலித்தொழிலாளி. கடந்த ஒரு ஆண்டாக இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்தார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பூட்டிக்கிடந்த வீட்டில் துர்நாற்றம் வீசியது குறித்து அப்பகுதியினர் நெல்லை ஜங்ஷன் போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


