Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/14 ஆயிரம் "ரயில்வே கிராஸிங்' சீரமைக்கப்படும் மத்தியமைச்சர் முனியப்பா பேட்டி

14 ஆயிரம் "ரயில்வே கிராஸிங்' சீரமைக்கப்படும் மத்தியமைச்சர் முனியப்பா பேட்டி

14 ஆயிரம் "ரயில்வே கிராஸிங்' சீரமைக்கப்படும் மத்தியமைச்சர் முனியப்பா பேட்டி

14 ஆயிரம் "ரயில்வே கிராஸிங்' சீரமைக்கப்படும் மத்தியமைச்சர் முனியப்பா பேட்டி

ADDED : ஜூலை 31, 2011 01:31 AM


Google News

சேலம்: ''நாடு முழுவதும், பாதுகாப்பு இல்லாத, 14 ஆயிரம் ரயில்வே கிராஸிங் கண்டறியப்பட்டுள்ளது.

அங்கு பணியாளர்களை நியமிக்கவும், புதியதாக பாலம் அமைக்கவும், கேட் போடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என, மத்திய ரயில்வே இணை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார்.சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனை ஆய்வு செய்த அவர், பின், நிருபர்களிடம் கூறியதாவது:ரயில் பெட்டிகள் பாதுகாப்பானதாக இல்லை என்று கூறப்படுவது தவறு. பழைய பெட்டிகளுக்கு பதிலாக புதிய பெட்டிகள் அமைக்கப்பட வேண்டும். ரேபேரலி, பாலக்காடு, மேற்குவங்கம் உள்ளிட்ட இடங்களில், புதிய ரயில் பெட்டி தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளது. அந்த ஆலைகள் அமையும்பட்சத்தில், அனைத்து வசதிகளுடன் ரயில் பெட்டிகள் இயங்கக்கூடும்.ரயில்வே ஸ்டேஷன்களில், பயணிகள் முகம் சுழிக்காத வண்ணம், ஹோட்டல் உணவுப் பொருட்கள், கழிவறைகள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என, கூறியுள்ளோம். அது தொடர்பாக, ஆய்வு நடத்தி வருகிறேன். நாடு முழுவதும் பாதுகாப்பு இல்லாத ரயில்வே கிராஸிங் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. ஆளில்லாத ரயில்வே கேட், கேட் இல்லாத பகுதிகள் என, 14 ஆயிரம் எண்ணிக்கையில் உள்ளது.இதற்கான நிதி ஒதுக்கீடு, கடந்த ரயில்வே பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டுள்ளது. 2015க்குள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும். சேலத்தில் இருந்து புதிய ரயில்கள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.புதிய ரயில்கள் இயக்குவது பற்றி, அதிகாரிகளுடன் ஆராய்ந்த பின்னரே முடிவு செய்யப்படும். தென் மாநிலங்களில் தான், அதிகப்படியாக ரயில் பயணத்தை மக்கள் விரும்புகின்றனர். அவர்களுக்காக, புதிய ரயில்கள் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.சேலம் கோட்ட பொதுமேலாளர் ராம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us