Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிராக்டிக்கல் தேர்வு பயிற்சி

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிராக்டிக்கல் தேர்வு பயிற்சி

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிராக்டிக்கல் தேர்வு பயிற்சி

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிராக்டிக்கல் தேர்வு பயிற்சி

ADDED : அக் 13, 2011 01:39 AM


Google News
மதுரை : சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தாண்டு ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிராக்டிக்கல் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிவியல் பாடத்திற்கு இத்தேர்வு நடத்தப்படும்.

இதற்காக 10ம் வகுப்புக்கு அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இன்று (அக்., 13) பிராக்டிக்கல் தொடர்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. காலை 9 மணிக்கு மதுரை கேப்ரன்ஹால் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி நடக்கும்.

இன்று உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், நாளை அரசு, மாநகராட்சி, ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி நடக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us