"மொபைலில்' பரவும் ஆசிரியர் தேர்வு "மெசேஜ்'
"மொபைலில்' பரவும் ஆசிரியர் தேர்வு "மெசேஜ்'
"மொபைலில்' பரவும் ஆசிரியர் தேர்வு "மெசேஜ்'
ADDED : ஜூலை 27, 2011 09:46 PM
சிவகங்கை : முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்வதற்கான, விண்ணப்பங்கள் முதன்மை கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுவதாக, மொபைல்களுக்கு 'மெசேஜ்' வருவதால், பட்டதாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
முதுகலை பட்டதாரிகளின் மொபைல் போன்களுக்கு, நவ., 27ல் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பம், அந்தந்த முதன்மை கல்வி அலுவலகத்தில், ஜூலை 25 முதல் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், பாடவாரியாக காலியிடங்கள் குறித்த விவரங்களை, 'மெசேஜ்'களாக மர்ம நபர்கள் வெளியிடுகின்றனர். இதனால், பெரும்பாலான பட்டதாரிகள் விண்ணப்பம் பெறுவதற்காக, முதன்மை கல்வி அலுவலகங்களில் குவிகின்றனர்.
இது குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தால் மட்டுமே, இங்கு விண்ணப்பம் வழங்கப்படும். எந்த அறிவிப்பும் வராத நிலையில் ஏன், விண்ணப்பம் கேட்டு வருகிறீர்கள் என, திருப்பி அனுப்பி வருகிறோம்,'' என்றார்.