/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/அழுகிய மீன்களை ஏற்றி செல்லும் வாகனங்களால் சுகாதார சீர்கேடுஅழுகிய மீன்களை ஏற்றி செல்லும் வாகனங்களால் சுகாதார சீர்கேடு
அழுகிய மீன்களை ஏற்றி செல்லும் வாகனங்களால் சுகாதார சீர்கேடு
அழுகிய மீன்களை ஏற்றி செல்லும் வாகனங்களால் சுகாதார சீர்கேடு
அழுகிய மீன்களை ஏற்றி செல்லும் வாகனங்களால் சுகாதார சீர்கேடு
ADDED : ஆக 01, 2011 01:59 AM
குற்றாலம் : கேரளாவில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக மினி லாரிகள்
மூலம் அழுகிய மீன்கள் ஏற்றி செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே
மினி லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.கேரளாவில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக மினி
லாரிகள் மூலம் அழுகிய மீன்கள் ஏற்றி செல்கின்றனர். இந்த அழுகிய மீன்களை
நாமக்கல், பல்லடம் போன்ற ஊர்களுக்கு கொண்டு சென்று கோழி தீவனங்களாக
பயன்படுத்துகின்றனர். இத்தகைய அழுகிய மீன்களை செங்கோட்டை, தென்காசி வழியாக
கொண்டுவரும் மினி லாரிகளின் பின்பகுதி மற்றும் மேல் பகுதி மூடப்படுவதில்லை.
அதிகளவு அழுகிய மீன்களை ஏற்றிக் கொண்டு நகரின் முக்கிய வழியாகவும், அதிக
வேகத்துடன் செல்வதால் ஆங்காங்கே அழுகிய மீன்கள் கீழே விழுகின்றன.மேலும்
மினி லாரிகளை ஓட்டி வரும் ஓட்டுநர்கள் லாரிகளை ரோட்டில் ஓரமாக
நிறுத்திவிட்டு அத்தியாவசிய பணிகளுக்கு சென்றுவிடுகின்றனர். அதற்குள்
அழுகிய மீன்களில் வைக்கப்பட்டிருக்கும் ஐஸ் கட்டிகள் உருகி ரோட்டு
பகுதியில் கழிவுநீராக தேங்கிவிடுவதால் அவ்வழியாக பாதசாரிகள் முகத்தை மூடி
சாலையை கடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டு வருகிறது. லாரிகளிலிருந்து
வெளியேறும் கழிவுநீரால் நகர் பகுதிகளில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய்
ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கோழி தீவனங்களுக்கு அழுகிய மீன்களை ஏற்றி செல்லும் வாகனங்கள்
மேல்பகுதியிலும், பின்பகுதியிலும் தார்பாய் போட்டு மூடி இரவு நேரங்களில்
மட்டுமே இவ்வாகனம் செல்ல அனுமதிக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு
ஏற்படும் வகையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க
வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.