கட்டாயப்படுத்தி கையெழுத்து அமர்சிங் ஆதரவாளர் முறையீடு
கட்டாயப்படுத்தி கையெழுத்து அமர்சிங் ஆதரவாளர் முறையீடு
கட்டாயப்படுத்தி கையெழுத்து அமர்சிங் ஆதரவாளர் முறையீடு
ADDED : ஆக 09, 2011 12:42 AM
புதுடில்லி : ஓட்டுக்குப் பணம் கொடுத்த வழக்கில், கைதாகியுள்ள சஞ்சீவ் சக்சேனா, 'போலீசார் தன்னை நிர்பந்தப்படுத்தி, கையெழுத்துப் பெற முயன்றனர் ' என, கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டில், மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக, இடதுசாரிக் கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இந்தத் தீர்மானத்திற்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் ஓட்டளிக்க, தங்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக, பா.ஜ., எம்.பி.,க்கள் மூன்று பேர் பார்லிமென்டில் புகார் தெரிவித்தனர்; நோட்டுக் கட்டுகளையும் பார்லிமென்டில் காண்பித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, அமர்சிங்கின் ஆதரவாளர் சக்சேனாவை, போலீசார் சமீபத்தில் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், தனக்கு ஜாமின் கோரி சக்சேனா தாக்கல் செய்த மனுவில், போலீசார் என்னிடம் அளித்த டைப் செய்யப்பட்ட பக்கங்களில், திக்விஜய் சிங், அகமது படேல், ஷீலா தீட்சித் உள்ளிட்ட காங்., நிர்வாகிகள், இந்த விவகாரத்தின் பின்னணியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது; இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நான் கையெழுத்திட மறுத்துவிட்டேன் என, தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு கோர்ட் நீதிபதி சங்கீதா திகிங்ரா ஷேகல், போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.


