/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/13 பட்டாசு ஆலைகள் உற்பத்திக்கு தடை :பல் துறை கூட்டுக்குழு நடவடிக்கை13 பட்டாசு ஆலைகள் உற்பத்திக்கு தடை :பல் துறை கூட்டுக்குழு நடவடிக்கை
13 பட்டாசு ஆலைகள் உற்பத்திக்கு தடை :பல் துறை கூட்டுக்குழு நடவடிக்கை
13 பட்டாசு ஆலைகள் உற்பத்திக்கு தடை :பல் துறை கூட்டுக்குழு நடவடிக்கை
13 பட்டாசு ஆலைகள் உற்பத்திக்கு தடை :பல் துறை கூட்டுக்குழு நடவடிக்கை
ADDED : ஆக 30, 2011 01:38 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 13 பட்டாசு ஆலைகள் உற்பத்திக்கு நிரந்தர தடைவிதித்து, பல் துறை கூட்டுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
மாவட்டத்தில் விதி மீறும், பட்டாசு ஆலைகளை கண்காணிக்க போலீசார், தீயணைப்பு, வருவாய்த்துறை, தொழிற்சாலை ஆய்வுத்துறை இணைந்த கூட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், தலைமை தொழிற்சாலை கமிஷனர் தலைமையில் ஆக., 18 முதல் 26 வரை 92 பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தினர். இதில், 84 தொழிற்சாலைகளில் விதி மீறல் கண்டறியப்பட்டது. 13 ஆலைகளுக்கு நிரந்தர உற்பத்தி தடையும், 35 ஆலைகளுக்கு மூன்று நாள் உற்பத்திக்கு தடையும் விதிக்கப்பட்டது. 36 ஆலைகளுக்கு காரணம் கேட்கப்பட்டுள்ளது. இதனிடையே ,''விதி மீறலில் ஈடுபடும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கலெக்டர் மு.பாலாஜி எச்சரித்துள்ளார்.


