/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/இளையரசனேந்தல் பிர்க்காவை இணைக்கக் கோரி உண்ணாவிரதம்இளையரசனேந்தல் பிர்க்காவை இணைக்கக் கோரி உண்ணாவிரதம்
இளையரசனேந்தல் பிர்க்காவை இணைக்கக் கோரி உண்ணாவிரதம்
இளையரசனேந்தல் பிர்க்காவை இணைக்கக் கோரி உண்ணாவிரதம்
இளையரசனேந்தல் பிர்க்காவை இணைக்கக் கோரி உண்ணாவிரதம்
ADDED : செப் 17, 2011 02:14 AM
கோவில்பட்டி : கோவில்பட்டி தாலுகாவுடன் இளையரசனேந்தல் பிர்க்காவை முழுமையாக சேர்ப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் துவங்கியது.
கோவில்பட்டி தாலுகாவில் இளையரசனேந்தல் பிர்க்காவை முழுமையாக இணைக்கவும், நாலாட்டின்புத்தூர் பஞ்., மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத பி.டி.ஓ.,வைக் கண்டித்தும், இனாம் பஞ்., தீர்வை விதிப்பில் பாரபட்சம் காட்டுவதை கண்டித்து கோவில்பட்டியில் தொடர் உண்ணாவிரதம் துவங்கியது. கோவில்பட்டி யூனியன் அலுவலக வாயிலில் உலக இளைஞர் மனித உரிமை கழக வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து அமைப்பின் மாவட்ட செயலாளர் வெள்ளைச்சாமி உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து கோவில்பட்டி தாசில்தார் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது தற்போதைய சட்ட ஒழுங்கு பிரச்னையால் அமைப்பின் கோரிக்கைகள் குறித்து ஆராய முடியவில்லை என்றும், வரும் 20ம் தேதிக்கு பின்னர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.


