Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஓட்டுப்பதிவு மையத்தில் "பூத்' ஏஜன்டுகள் எண்ணிக்கை

ஓட்டுப்பதிவு மையத்தில் "பூத்' ஏஜன்டுகள் எண்ணிக்கை

ஓட்டுப்பதிவு மையத்தில் "பூத்' ஏஜன்டுகள் எண்ணிக்கை

ஓட்டுப்பதிவு மையத்தில் "பூத்' ஏஜன்டுகள் எண்ணிக்கை

ADDED : அக் 12, 2011 02:35 AM


Google News
சென்னை மாநகராட்சி தேர்தலில், அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அவர்களின் சார்பாக தேர்தல் பணி பார்க்கும், 'பூத்' ஏஜன்டுகளை சமாளிப்பது குறித்தும், ஓட்டுப்பதிவு மையத்தில் ஏற்படும் இட நெருக்கடி பிரச்னையை தீர்ப்பது குறித்தும், தேர்தல் கமிஷன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.விரிவாக்கம் செய்யப்பட்ட, சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன; மேயர் பதவிக்கு 32 பேரும், கவுன்சிலர் பதவிக்கு 2,470 பேரும் போட்டியிடுகின்றனர்.

ஓட்டுப்பதிவின் போது, ஒவ்வொரு வேட்பாளருக்கும் அவர் சார்பாக, ஒரு, 'பூத்' ஏஜன்டும், அவருக்கு மாற்று நபரும் நியமிக்கப்படுவர்.தற்போதைய தேர்தலில், 32 மேயர் வேட்பாளரோடு, ஒரு வார்டில் அதிக எண்ணிக்கையாக, 20 கவுன்சிலர்கள் வரை போட்டியிடுகின்றனர். இதனால், ஒரு ஓட்டுச்சாவடியில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஏஜன்டுகள் அமர வேண்டிய நிலை உள்ளது. ஓட்டுச்சாவடிக்குள் இருப்பவர்களுக்கு, மாற்று நபராக நியமிக்கப்படும் நாற்பதுக்கும் மேற்பட்டவர்களும், வெளியே காத்திருக்க வேண்டியிருக்கும். இதனால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியும், ஏஜன்டுகளால் நிரம்பி வழியவுள்ளது.அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளின் வகுப்பறைகளே ஓட்டுப்பதிவு நடக்கும் இடமாக உள்ளன. பல பள்ளிகளில் வகுப்பறைகள் மிக குறுகியதாக உள்ளன. இந்த ஓட்டுப்பதிவு அறையில், நாற்பதுக்கும் மேற்பட்ட, 'பூத்' ஏஜன்டுகளை அமர வைக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் உரிமையை பயன்படுத்தி, 'பூத்' ஏஜன்டுகளை கட்டாயம் நியமிப்பார்கள் என்பதால், அவர்களை தேர்தல் கமிஷனால் தவிர்க்க முடியாது.'பூத்' ஏஜன்டுகள் தவிர, தேர்தல் பணியாளர்களும் ஓட்டுப்பதிவு மையத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டும். இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில், இடையூறு இல்லாமல், வாக்காளர்கள் ஓட்டு போட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஓட்டுப்பதிவு மையத்தில், பத்து ஏஜன்டுகள் இருந்தாலே பல நேரங்களில் வாக்குவாதம் ஏற்படும் என்ற நிலையில், இவ்வளவு ஏஜன்டுகள் இருந்தால், அவர்களை எப்படி சமாளிப்பது என, தேர்தல் அலுவலர்கள் ஆலோசித்து வருகின்றனர். ஓட்டுப்பதிவின் போது, சிறு தவறு நடந்தாலும் அனைத்து ஏஜன்டுகளும் கேள்வி எழுப்புவார்கள்; அவர்களை எப்படி சமாளிப்பது என்று தேர்தல் அலுவலர்கள் குழப்பமடைந்துள்ளனர்.பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு, யார் ஓட்டுச்சாவடிக்குள் போனார்கள், யார் வெளியே சென்றார்கள் என அடையாளம் காண்பது மிகவும் கடினமான வேலையாகிவிடும். பெரும் எண்ணிக்கையிலான, 'பூத்' ஏஜன்டுகள் மற்றும் மாற்று ஓட்டுப்பதிவில் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்ப்பது குறித்து, காவல் துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கே. ராஜ்குமார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us