/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நகராட்சி மீது காங்., குற்றச்சாட்டுநகராட்சி மீது காங்., குற்றச்சாட்டு
நகராட்சி மீது காங்., குற்றச்சாட்டு
நகராட்சி மீது காங்., குற்றச்சாட்டு
நகராட்சி மீது காங்., குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 28, 2011 12:47 AM
வால்பாறை : டவுன் பகுதியில் துப்புரவுப்பணி மேற்கொள்வதில் நகராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டுவதாக இளைஞர் காங்., குற்றம் சாட்டியுள்ளது.
வால்பாறை சட்டசபை தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. நகராட்சியில் சமீபகாலமாக குப்பைகள் அள்ளுவதில் துப்புரவுப்பணியாளர்கள் தயக்கம் காட்டிவருவதால் டவுன் பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காந்திசிலை வளாகத்தை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும். கூப்பு மரம் வெட்டும் தொழிலாளர்களுக்கு முறையான காப்பீடு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


