ADDED : ஜூலை 26, 2011 12:47 AM
பழநி : பழநி கோவில் 'ரோப் கார்', பராமரிப்புக்காக, இன்று முதல் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுகிறது.
இங்கு ஜூலையில் பராமரிப்புப் பணிகள் நடக்கும். கடந்த ஆண்டு நடந்த பணியின் போது, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து வரவழைக்கப்பட்ட, 700 மீட்டர் நீள இரும்புக் கயிறு பொருத்தப்பட்டது. இதன் மதிப்பு ஐந்து லட்ச ரூபாய். ரோப் பைண்டிங் இயந்திரம் உள்ளிட்டவை புதிதாகப் பொருத்தப்பட்டன. மேலும், 25 டன் பொருட்களை, ஏற்றிச் சோதனை ஓட்டத்திற்குப் பின் இயக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான பராமரிப்பு, இன்று துவங்குகிறது.