ADDED : ஜூலை 27, 2011 12:09 AM

புதுச்சேரி:பிரதமர் மன்மோகன் சிங்கை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று
சந்தித்து பேசினார்.திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ரங்கசாமி,
நேற்று முன்தினம் இரவு டில்லிக்குச் சென்றார்.இவர், பிரதமர் மன்மோகன்
சிங்கை சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு நேற்று காலை
சென்றார்.முதல்வருடன் அகில இந்திய என்.ஆர்.காங்., கட்சியின் பொதுச் செயலர்
பாலன் சென்றிருந்தார்.புதுச்சேரி அரசியல் நிலவரம் தொடர்பாகவும், புதுச்சேரி
வளர்ச்சிப் பணிகள் குறித்தும் பிரதமருடன் ரங்கசாமி ஆலோசனை
நடத்தினார்.மேலும், புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த,
3,645 கோடி ரூபாயை சிறப்பு நிதி உதவியாக வழங்க வேண்டும் என, பிரதமரிடம்
முதல்வர் மனு அளித்தார்.
புதுச்சேரியின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
என்றும் கேட்டுக் கொண்டார்.இந்த சந்திப்பு, 20 நிமிடங்கள் நடந்தது.
சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராக பொறுப்பேற்ற ரங்கசாமி,
பிரதமரை முதன் முறையாக சந்திப்பது குறிப்பிடத்தக்கது.


