/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பட்டா மாறுதல் மனு அளிக்க அரசு புது உத்தரவுசாத்தை தாசில்தார் தகவல்பட்டா மாறுதல் மனு அளிக்க அரசு புது உத்தரவுசாத்தை தாசில்தார் தகவல்
பட்டா மாறுதல் மனு அளிக்க அரசு புது உத்தரவுசாத்தை தாசில்தார் தகவல்
பட்டா மாறுதல் மனு அளிக்க அரசு புது உத்தரவுசாத்தை தாசில்தார் தகவல்
பட்டா மாறுதல் மனு அளிக்க அரசு புது உத்தரவுசாத்தை தாசில்தார் தகவல்
ADDED : ஜூலை 28, 2011 01:24 AM
சாத்தான்குளம் : பட்டா மாறுதல் மனுக்களை திங்கள்கிழமைகளில் வி.ஏ.ஓ.,அலுவலகத்திலேயே வழங்கி ஒப்புதல் ரசீது பெற்றுக் கொள்ளலாம் என சாத்தான்குளம் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
ஒரு நபருக்கு சொத்து இருந்தால் அதற்கு பட்டா பெறுவது அவசியமாகும். சொத்தை விற்பதற்கோ வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கோ பட்டா இருந்தால் தான் விண்ணப்பிக்க முடியும். இத்தகைய பட்டாவில் பெயர்மாற்றம் செய்ய முன்பு தாலுகா அலுவலகத்தில் மனு செய்ய வேண்டும். அது சம்பந்தப்பட்ட கிளார்க், ஆர்.ஐ.,வழியாக வி.ஏ.ஓ., விடம் அனுப்பி வைக்கப்படும். இதனால் வீண் காலதாமதம் ஏற்பட்டது. எனவே பட்டாமாறுதலுக்கு வி.ஏ.ஓ.,அலுவலகத்திலேயே விண்ணப்பிக்க வழிவகை செய்ய வேண்டும் என தினமலரில் சென்ற ஆண்டு செய்தி வெளியானது. தற்போது புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு வி.ஏ.ஓ.,அலுவலகத்திலேயே பட்டா மாறுதல் மனு அளிக்கலாம் என உத்திரவிட்டது. இது பற்றி சாத்தான்குளம் தாசில்தார் கருப்பசாமி கூறியதாவது, பொதுமக்கள் தங்கள் பட்டாவில் பெயர் மாறுதலுக்கு தங்களது பகுதி வி.ஏ.ஓ.,அலுவலகத்தில் திங்கள் கிழமைகளில் மனுக்கள் கொடுத்து அதற்குரிய ரசீதுகளைப் பெற்றுக் கொள்ளலாம். வி.ஏ.ஓ.,இல்லாத கிராமங்களில் இன்சார்ஜ் வி.ஏ.ஓ.,க்களிடம் செவ்வாய்கிழமைகளில் மனுக்கள் வாங்கப்படும். இவ்வாறு சாத்தை., தாசில்தார் கருப்பசாமி கூறியுள்ளார்.


