/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை: வேளாண் இணை இயக்குனர்கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை: வேளாண் இணை இயக்குனர்
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை: வேளாண் இணை இயக்குனர்
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை: வேளாண் இணை இயக்குனர்
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை: வேளாண் இணை இயக்குனர்
ADDED : ஜூலை 28, 2011 01:55 AM
கிருஷ்ணகிரி : 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உர விற்பனையாளர்கள் உரம் மற்றும் யூரியாக்களை அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என வேளாண் இணை இயக்குனர் நாச்சியப்பன் எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2011 ஜூன் 1ம் தேதி முதல் சத்துக்களின் அடிப்படையில் பல்வேறு வகை உரங்களின் அதிகபட்ச புதிய விற்பனை விலை மற்றும் நிறுவனங்கள் வாரியாக புதிய விலைக்கொள்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி 50 கிலோ இறக்குமதி யூரியா 278 ரூபாய், 50 கிலோ உள்நாட்டு தயாரிப்பு யூரியா 276, ஸ்பிக் டி.ஏ.பி., 656 , ஐ.பி.எல்., டி.ஏ.பி., 624 , எம்.சி.எஃப்., டி.ஏ.பி., 624 , சி.ஐ.எல்., டி.ஏ.பி., 625, ஜீவாரி டி.ஏ.பி., 630, இஃப்கோ டி.ஏ.பி., 624, ஐ.பி.எல்., பொட்டாஷ் 312, எம்.சி.எஃ ப்., பொட்டாஷ் 262, ஆர்.சி.எஃப்., பொட்டாஷ் 265, ஜீவாரி பொட்டாஷ் 315, சி.ஐ.எல்., சூப்பர் பாஸ்பேட் 215, ஸ்பிக் சூப்பர் பாஸ்பேட் 209, கோத்தாரி சூப்பர் பாஸ்பேட் 225, சி.பி.எஃப்., சூப்பர் பாஸ்பேட் 215 ரூபாய் அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. இஃப்கோ 20:20:0:13., 520 ரூபாய், பாக்ட் 20:20:0:13., 484, ஐ.பி.எல்., 20:20:0:13.,410 ரூபாய், ஆர்.சி.எஃப்.,15:15:15.,403 ரூபாய், ஜீவாரி 12:32:16., 588 ரூபாய், இஃப்கோ 10:26:26., 561 ரூபாய், சி.ஐ.எல்., 10:26:26.,560 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. யூரியா, முயூரேட் ஆப் பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட், டி.ஏ.பி., மற்றும் காம்ப்ளக்ஸ் உர மூட்டைகளிலேயே ஒரு மூட்டைக்கான விற்பனை விலை மற்றும் ஒரு மூட்டைக்கு வழங்கப்படும் மானிய விலையும் குறிக்கப்பட்டுள்ளது. உர விற்பனையாளர்கள் தங்கள் உரிமத்தில் அனுமதி பெற்ற ஏஜன்ட்கள் மட்டுமே உரங்களை விற்பனை மற்றும் இருப்பு வைப்பதுடன் உர விற்பனையாளர்கள் தங்களது உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களின் உரங்களை மட்டும் இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். அனைத்து சில்லரை மற்றும் மொத்த உர விற்பனையாளர்கள் உரம் இருப்பு மற்றும் விற்பனை விலை குறித்த தகவல் பலகை தவறாது வைத்திருக்க வேண்டும். பட்டியல் படி பெறப்பட்ட உரங்களின் விற்பனை விலையினை இருப்பு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். நிறுவனப் பட்டியல்களில் விபரங்கள் பதிவேடு மற்றும் பட்டியல்களில் குறிப்பிடப்பட்ட வேண்டும். அனைத்து சில்லரை மற்றும் மொத்த உர விற்பனையாளர்கள் சில்லரை விற்பனை நிலையத்துக்கும் மொத்த விற்பனை நிலையத்துக்கும் தனித்தனியாக இருப்பு பதிவேடு மற்றும் பில் புத்தகம் பராமரிக்க வேண்டும். சில்லரை உர விற்பனையாளர்கள் விவசாயிகள் உரங்களை வாங்கும் பொழுது கண்டிப்பாக 'எம்' படிவத்தில் ரசீது வழங்கி விவசாயிகளிடம் கண்டிப்பாக ரசீதில் கையொப்பம் பெற வேண்டும். விவசாயிகள் 50 கிலோவுக்கு குறைவாக அதாவது 10 கிலோ அல்லது 20 கிலோ என்ற அளவில் வாங்கினாலும் அவர்களுக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும். உரங்களை விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் ஏதேனும் வந்தால் உடன் ஆய்வு செய்து உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன் படி உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.


