ADDED : ஜூலை 28, 2011 09:10 PM
பல்லடம் : பல்லடம் ஈஷா சமுதாய மையத்தில் எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மூலிகைகள் வழங்குவதற்காக மூலிகை தோட்டம்
அமைக்கப்பட்டுள்ளது.
எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்காக, பல்லடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஈஷா சமுதாய நல
மையத்தில் மருத்துவ குணம் கொண்ட சிரியாநங்கை, வல்லாரை, கருந்துளசி,
முரிகூட்டி மற்றும் பொன்னாங்கன்னி உள்ளிட்ட 20 வகையான மூலிகை நாற்றுகள்
நடப்பட்டு, மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை துணை
இயக்குனர் விஜயலட்சுமி திறந்து வைத்தார். மூலிகை தோட்டத்தில் விளையும்
மூலிகைகள், எச்.ஐ.வி., நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். ஈஷா தன்னார்வ
தொண்டர்கள், எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்றனர்.


