Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி ஈஷா வித்யா பள்ளியில் மதிய உணவு திட்டம் துவக்கம்

தூத்துக்குடி ஈஷா வித்யா பள்ளியில் மதிய உணவு திட்டம் துவக்கம்

தூத்துக்குடி ஈஷா வித்யா பள்ளியில் மதிய உணவு திட்டம் துவக்கம்

தூத்துக்குடி ஈஷா வித்யா பள்ளியில் மதிய உணவு திட்டம் துவக்கம்

ADDED : ஜூலை 30, 2011 01:04 AM


Google News
தூத்துக்குடி: தூத்துக்குடி ஈஷா வித்யா பள்ளியில் மதிய உணவு திட்டம் துவக்கப்பட்டது.தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி ஈஷா வித்யா பள்ளியில் மதிய உணவு திட்டம் துவங்கப்பட்டது.

பள்ளிமாணவர்களுக் சரியான ஊட்டசத்து உள்ள உணவுகள் வழங்கவேண்டும் என்பதற்க சத்குரு அனைத்து ஈஷா வித்யா பள்ளிகளிலும் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கூட்டாம்புளி ஈஷா வித்யா பள்ளியிலும் மதிய உணவு திட்டம் துவங்கப்பட்டது. விழாவில் ஸ்டெர்லைட் சமுதாய வளர்ச்சிபிரிவு மேலாளர் ராஜசேகரபாண்டி, அக்ஸார் பெயிண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் பரமகுருராஜா, அன்னை ஜூவல்லர்ஸ் உரிமையாளர் முருகானந்தம், தமிழ்நாடு வணிகர் பேரவை மாநில துணைத்தலைவர் பொன்தனகரன், வீரமணிஆஸ்பத்திரி இயக்குநர் வெங்கட், தொழிலதிபர்கள் நாராயணன், அசோக், சீனியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு மரகன்றுகளை நட்டினர். மதியஉணவு சமையல் அறையை கௌரிசெல்வமதன், சித்ரா பாலசுந்தர் ஆகியோர் திறந்துவைத்தனர். விழாவிற்கு வந்தவர்களை பள்ளியின் தாளாளர் வினோத்ஹரி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் மீனா நன்றி கூறினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஈஷா தன்னார்வ தொண்டர்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us