Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/நாட்டிங்காம் டெஸ்ட்: இங்கிலாந்து அபார வெற்றி

நாட்டிங்காம் டெஸ்ட்: இங்கிலாந்து அபார வெற்றி

நாட்டிங்காம் டெஸ்ட்: இங்கிலாந்து அபார வெற்றி

நாட்டிங்காம் டெஸ்ட்: இங்கிலாந்து அபார வெற்றி

UPDATED : ஆக 01, 2011 10:37 PMADDED : ஆக 01, 2011 09:57 PM


Google News
நாட்டிங்காம்: நாட்டிங்காமில் நடந்து 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 319 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

479 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணி 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் 2-0 என்ற புள்ளிக்கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. இந்திய தரப்பில் சச்சின் 56 ரன்களும்,ஹர்பஜன் 46 ரன்களும் சேர்த்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து தரப்பில் பிரஸ்ஸனன் 5 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் 3, பிராட் 2 விக்கெட்டுகளயும் வீழ்த்தினர். முன்னதாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 221 ரன் எடுத்தது. இந்தியா 288 ‌சேர்த்து 67 ரன் முன்னிலை பெற்றது. இந்திய தரப்பில் டிராவிட்117,யுவராஜ் 62, லஷ்மண் 54 எடுத்தனர்.இங்கிலாந்து அணி 2வது இன்னி்ங்சில் 544 ரன் எடுத்தது.அந்த அணியின் பெல் 159,பிரஸ்ஸனன்90, பிரையர்73,மார்கன்70, பீட்டர்சன்63 ரன் ‌எடுத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us