Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/தியாகி பென்ஷன் கோரி 39 ஆண்டுகளாக போராடும் மதுரை முதியவர் மனு

தியாகி பென்ஷன் கோரி 39 ஆண்டுகளாக போராடும் மதுரை முதியவர் மனு

தியாகி பென்ஷன் கோரி 39 ஆண்டுகளாக போராடும் மதுரை முதியவர் மனு

தியாகி பென்ஷன் கோரி 39 ஆண்டுகளாக போராடும் மதுரை முதியவர் மனு

ADDED : ஆக 02, 2011 01:20 AM


Google News

மதுரை : தியாகி பென்ஷன் கோரி 39 ஆண்டுகளாக போராடும் மதுரை முதியவர் குறித்த தகவல்களை மாநில அரசிடம் கேட்டு பெறமத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.



மதிச்சியத்தை சேர்ந்த ஆனந்தம்(86) தாக்கல் செய்த ரிட் மனு: இந்திய தேசிய ராணுவத்தில் 1944ல் சேர்ந்தேன்.

பர்மாவில் இரண்டு ஆண்டுகள் 103 படை பிரிவில் பணிபுரிந்தேன். 1945 ஏப்., 24ல் என்னை சிறை பிடித்து ஆங்கிலேய, பிரிட்டிஷ் ராணுவத்தினர் ரங்கூன் சிறையில் அடைத்தனர். 1945 மே 21 முதல் 1946 பிப்., 28 வரை சிறையில் இருந்தேன். இதுகுறித்து சான்றிதழ் கொடுத்துள்ளனர். தியாகிகள் பென்ஷன் கேட்டு மாநில அரசுக்கு விண்ணப்பித்தேன். 1968 முதல் மாநில அரசு பென்ஷன் வழங்குகிறது. மத்திய அரசு பென்ஷன் கோரி 1972 ஆக., 4ல் விண்ணப்பித்தேன். பல காரணங்களை கூறி, இதுவரை பென்ஷன் வழங்காமல், மத்திய உள்துறை அமைச்சகம் இழுத்தடிக்கிறது. மத்திய அரசு பென்ஷன் வழங்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சாமிதுரை, ஞானகுருநாதன் ஆஜராயினர். நேரில் ஆஜரான மனுதாரரை நீதிபதி விசாரித்தார். மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் செந்தில்வேலன் ஆஜரானார். பின் நீதிபதி ஆர்.சுதாகர், ''மனுதாரர், கோரிக்கை குறித்து மீண்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும். கலெக்டர் அதை மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி பரிந்துரைக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகம், மனுதாரர் தியாகி பென்ஷன் பெறும் தகவல்களை மாநில அரசிடம் கேட்டு பெற வேண்டும்,'' என்றார். விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us