/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வெள்ள நிவாரண நிதியில் மோசடி :விவசாயி பகீர் புகார்வெள்ள நிவாரண நிதியில் மோசடி :விவசாயி பகீர் புகார்
வெள்ள நிவாரண நிதியில் மோசடி :விவசாயி பகீர் புகார்
வெள்ள நிவாரண நிதியில் மோசடி :விவசாயி பகீர் புகார்
வெள்ள நிவாரண நிதியில் மோசடி :விவசாயி பகீர் புகார்
ADDED : ஆக 03, 2011 01:08 AM
ஊட்டி : 'நிவாரண நிதியில் தோட்டக்கலை துறை அதிகாரிகள் மோசடி செய்துள்ளனர்,' என விவசாயி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தூனேரி, எப்பநாடு, கடநாடு கிராமங்களில் பெய்த கன மழை காரணமாக, 265.49 ஹெக்டர் பரப்பளவில் 50 சதவீதத்துக்கும் மேல் மலை காய்கறிகள் நாசமாயின. 90.83 ஹெக்டர் பரப்பில் உருளைக்கிழங்கு, 7.09 ஹெக்டர் பரப்பில் முட்டைகோஸ், 73.25 ஹெக்டர் பரப்பில் காரட், 94.32 ஹெக்டர் பரப்பளவில் இதர காய்கறி பயிர்கள் சேதமடைந்ததாக கணக்கிடப்பட்டது. இதில் 1,244 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஹெக்டர் பயிர் இழப்பிற்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டு, இதற்காக மாநில அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 15 லட்சத்து 92 ஆயிரத்து 900 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 31ம் தேதி தொரைஹட்டியில் நடந்த விழாவில் விவசாயிகளுக்கு உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன் நிவாரண தொகையை வழங்கினார். இந்நிலையில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் தோட்டக்கலை துறை அதிகாரிகள் மோசடி செய்துள்ளதாக விவசாயி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். உலுப்பட்டியை சேர்ந்த விவசாயி ஆலன் கூறியதாவது:எனக்கு வெள்ள நிவாரண தொகையாக 3,600 ரூபாய் அமைச்சர் மூலம் வழங்கப்பட்டது. ஆனால், காசோலையிட்ட உறையின் மேல் பகுதியில் மட்டுமே 3,600 ரூபாய் என எழுதியிருந்தது. வீட்டுக்கு போய் பார்த்த போது, உறையின் உள்ளே 1,200 ரூபாய்க்கான காசோலை தான் இருந்தது. அதன்பின், தோட்டக்கலை துறை அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்த போது, அங்கிருந்த பதிவேட்டிலும் 3,600 ரூபாய் என பதிவாகி இருந்தது. தோட்டக்கலை அதிகாரிகளிடம் முறையிட்ட போது, 'அங்கு பதிவான முழு தொகையும் கொடுக்க முடியாது; நிவாரண தொகை அவ்வளவு தான் கொடுக்க முடியும்' என அலட்சியமாக பதிலளித்தனர். என்னிடம் மட்டும் 2,400 ரூபாய் மோசடி செய்த அதிகாரிகள், 1,244 விவசாயிகளிடம் மொத்தம் எத்தனை லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பர். இது குறித்து மாநில அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு ஆலன் கூறினார். இது குறித்து நீலகிரி தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஹால்துரை கூறுகையில், ''இந்த காசோலை குறித்த புகார் வந்தது. அதற்கான அதிகாரிகளிடம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


