/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கிணற்றில் விழுந்து ஒருவர் சாவு போலீஸ் விசாரணைகிணற்றில் விழுந்து ஒருவர் சாவு போலீஸ் விசாரணை
கிணற்றில் விழுந்து ஒருவர் சாவு போலீஸ் விசாரணை
கிணற்றில் விழுந்து ஒருவர் சாவு போலீஸ் விசாரணை
கிணற்றில் விழுந்து ஒருவர் சாவு போலீஸ் விசாரணை
ADDED : ஆக 03, 2011 01:49 AM
குறிஞ்சிப்பாடி : குள்ளஞ்சாவடி அருகே கிணற்றில் மர்மமான முறையில் இறந்து
கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி
அடுத்த பிள்ளைபாளை யத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செந்தில் முருகன், 31.
கூலி வேலை செய்து வந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியது. இரண்டு
குழந்தைகள் உள்ளன. இவர் கடந்த மாதம் 30ம் தேதி மதியம் வீட்டில் இருந்து
வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்ப வில்லை. அவரது மனைவி பல
இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் வடலூர் போலீசில் புகார்
அளித்தார். இந்நிலையில் சந்தைத்தோப்பு பகுதியில் உள்ள செல்வராஜ்
என்பவருக்கு சொந்தமான கிணற்றில் ஒருவர் மர்ம மான முறையில் இறந்து
கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார்,
உடலை கைப்பற்றி விசாரித்ததில் அவர் செந்தில்முருகன் என தெரிய வந்தது. உடலை
பிரேத பரிசோத னைக்கு கடலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது
குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீ சார் வழக்கு பதிந்து விசாரித்து
வருகின் றனர்.


