/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கோழி திருடியதை கண்டித்த வாலிபரை தாக்கிய 7 பேருக்கு வலைகோழி திருடியதை கண்டித்த வாலிபரை தாக்கிய 7 பேருக்கு வலை
கோழி திருடியதை கண்டித்த வாலிபரை தாக்கிய 7 பேருக்கு வலை
கோழி திருடியதை கண்டித்த வாலிபரை தாக்கிய 7 பேருக்கு வலை
கோழி திருடியதை கண்டித்த வாலிபரை தாக்கிய 7 பேருக்கு வலை
ADDED : ஆக 03, 2011 10:03 PM
பரங்கிப்பேட்டை : கோழியை திருடி சமைத்து சாப்பிட்டதை தட்டிக் கேட்ட வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 7 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த மணல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணி. இவர் வீட்டு கோழியை அதே பகுதியை சேர்ந்த இளவரசன் உட்பட 7 பேர் திருடி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட கல்யாணியை திட்டினர். இதனை அறிந்த கல்யாணியின் மைத்துனர் குபேர், மணல்மேடு கிராமத்திற்கு சென்று கிராம முக்கியஸ்தர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளவரசன், கருத்தழகன், தண்டபாணி, பிரசாந்த், ஆனந்தகுமார், அன்பழகன், சிற்றரசு ஆகிய 7பேர், குபேரை வழிமறித்து தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிந்து இளவரசன் உட்பட 7 பேரை தேடி வருகிறார்.


