நீலகிரி அணைகளில் வறட்சி மின் உற்பத்தி குறையும் அபாயம்
நீலகிரி அணைகளில் வறட்சி மின் உற்பத்தி குறையும் அபாயம்
நீலகிரி அணைகளில் வறட்சி மின் உற்பத்தி குறையும் அபாயம்
ADDED : ஆக 05, 2011 12:46 AM
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில், மின் உற்பத்திக்கு பயன்படும் முக்கிய நீர்த்தேக்கங்களில், போதுமான நீர் இருப்பு இல்லை.
நீலகிரியில், பருவமழை தீவிரமடைந்துள்ளது. நாள் முழுவதும் மழை பெய்து வருவதால், பகல் நேரங்களிலேயே கடும் குளிர் நிலவுகிறது. அதிகபட்சமாக, 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
நேற்று முன்தினம், அதிகபட்சமாக, தேவாலாவில், 74 மி.மீ., மழை பதிவாகியது. குன்னூரில், 1.20, கூடலூரில் 15, குந்தாவில், 3, கேத்தியில், 6, கோத்தகிரியில், 2, நடுவட்டத்தில், 24, ஊட்டியில், 10, கிளன்மார்கனில், 12, அப்பர் பவானியில், 24, எமரால்டில், 8, அவலாஞ்சியில், 35, கெத்தையில், 1 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக, தொடர்ந்து மழை பெய்தும், மின் உற்பத்திக்கு பயன்படும் முக்கிய அணைகளான எமரால்டு மற்றும் அவலாஞ்சி அணைகள் நிரம்பவில்லை. இந்த அணைகளின் நீர்மட்டம் குறைவாக உள்ளது. எனினும், தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆனால், தென்மேற்கு பருவ மழை முடியும் தறுவாயில் உள்ளதால், இனி வரும் சில நாட்களில் அணைகள் நிரம்ப வாய்ப்பில்லை. இதனால், மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


