பல்கலைகள் வருவாய் தொகையை நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய உத்தரவு
பல்கலைகள் வருவாய் தொகையை நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய உத்தரவு
பல்கலைகள் வருவாய் தொகையை நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய உத்தரவு
சென்னை : பல்கலைக்கழகங்கள் தங்களது அன்றாட செலவினம் தவிர்த்து, இதர தொகைகளை, அரசு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டுமென, உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் கண்ணன் அனுப்பியுள்ள கடிதம்: உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து பல்கலைகளிலும், பல்கலை மானியக் குழு உதவித் தொகை, மத்திய அரசு உதவித் தொகை, தமிழக அரசின் மானியம் மற்றும் உதவித் தொகை, கல்விக் கட்டணம், அறக்கட்டளைத் தொகை, பரிசுத் தொகை, நன்கொடை மற்றும் கல்லூரி இணைப்புக் கட்டணம் மூலம் பெறப்படும் வருவாய், தேசிய வங்கிகளில் வைப்புத் தொகையாக வைத்து மேற்கொள்வது வழக்கத்தில் உள்ளது.
தேசிய வங்கிகளை விட, மாநில அரசின் நிதி நிறுவனங்களான, தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகை வைத்தால், கூடுதல் வட்டி கிடைக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், இவை தமிழக அரசு நிறுவனங்களாகும். எனவே, அனைத்து பல்கலைக்கழகங்களும், வங்கி சேமிப்பு கணக்கு, அன்றாட செலவு தவிர்த்து இதர வருவாய்கள் மூலம் பெறப்படும் தொகை, தொலைதூரக் கல்விக் கட்டணம் மூலம் பெறப்படும் தொகை மற்றும் இதர தொகைகள் இருந்தால், அவற்றை மாநில அரசின் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம், வங்கிகளைத் தேர்வு செய்வதில் புகார்கள் எழும் நிலை தவிர்க்கப்படும்.


