Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/எங்களுக்கு சீனா உதவும்: இலங்கை கொக்கரிப்பு

எங்களுக்கு சீனா உதவும்: இலங்கை கொக்கரிப்பு

எங்களுக்கு சீனா உதவும்: இலங்கை கொக்கரிப்பு

எங்களுக்கு சீனா உதவும்: இலங்கை கொக்கரிப்பு

ADDED : ஆக 12, 2011 09:32 AM


Google News

கொழும்பு: மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா., வில் விவாதம் வரும் போது, சீனா தன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதை தடுக்கும் என இலங்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடந்த கடைசி கட்டப்போரின் போது, அங்கு போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடந்ததால், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் சீனா சென்ற இலங்கை அதிபர் ராஜபக்ஷே மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பெரீஸ் ஆகியோர் சீன பிரதமர் வென்ஜியாபோவை சந்தித்து பேசினர். இதன் பின்னர் கொழும்பில் நிருபர்களிடம் பேசிய பெரீஸ், சர்வதேச நாடுகள் ஐ.நா., சபையில் அழுத்தம் தந்தால் அதை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் தடுத்து நிறுத்தும் என்றும், அதற்கான உறுதிமொழியை சீன பிரதமர் தந்திருப்பதாகவும் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us