உத்தரகண்ட் மாநிலத்தில் கன மழைக்கு 5 பேர் பலி
உத்தரகண்ட் மாநிலத்தில் கன மழைக்கு 5 பேர் பலி
உத்தரகண்ட் மாநிலத்தில் கன மழைக்கு 5 பேர் பலி
ADDED : ஆக 13, 2011 01:28 AM
டேராடூன் : உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால், வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர்.
உத்தரகண்ட் மாநிலம் தெக்ரி மாவட்டத்தில், நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. அப்போது, மோல்தார் கிராமத்தில், ஒரு வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது. இச்சம்பவத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, ஐந்து பேர் பலியாகினர். தகவலறிந்த மீட்புப்படையினரும், போலீசாரும் விரைந்து சென்று, இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்டனர்.
பலியானவர்களின் குடும்பத்திற்கு, உத்தரகண்ட் கவர்னர் மார்கரெட் ஆல்வா, முதல்வர் ரமேஷ் பொக்ரியால் இரங்கல் தெரிவித்துள்ளனர். தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் பொக்ரியால் அறிவித்துள்ளார்.


