Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களை நிர்ணயிக்க கமிஷன் அமைக்க கோரிக்கை

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களை நிர்ணயிக்க கமிஷன் அமைக்க கோரிக்கை

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களை நிர்ணயிக்க கமிஷன் அமைக்க கோரிக்கை

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களை நிர்ணயிக்க கமிஷன் அமைக்க கோரிக்கை

ADDED : ஆக 20, 2011 02:49 AM


Google News

புதுடில்லி : 'வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்ய, கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும்' என, லோக்சபாவில் எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.

லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது, பல்வேறு கட்சி உறுப்பினர்கள் சில கோரிக்கைகளை வற்புறுத்தினர்.

அவற்றின் விவரம் வருமாறு: கவுஷலேந்திர குமார்(ஐக்கிய ஜனதா தளம்): வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான வரையறை என்ன? எத்தனை பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர் என்பதை நிர்ணயம் செய்ய கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும். ஒவ்வொரு மட்டத்திலும் வறுமை கோடு குறித்த நிர்ணயம் மாறுபடுகிறது. இதை சரியாக வரையறுத்தால் தான், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு நல திட்டங்கள் சென்றடையும்.

ஷைலேந்திர குமார் (சமாஜ்வாடி கட்சி): பிரபல பாடகர் முகமது ரபி மறைவுக்கு பிந்தைய பாரத ரத்னா விருதை அறிவிக்க வேண்டும். காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை அவர் பாடியுள்ளார். இந்த விருது மூலம் அவருக்கு மரியாதை செய்ய வேண்டும்.

ஹன்ஸ் ராஜ் அகிர் ( பா.ஜ.,): சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் பல மோசடிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. நேரடி அன்னிய முதலீட்டால் சிறு வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us