ADDED : ஆக 24, 2011 10:50 PM
திண்டுக்கல் : ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் அன்னாஹசாரேவுக்கு
ஆதரவு தெரிவித்து, திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
மாணவர்கள் உறுதி மொழி எடுத்தனர்.'பேட்ஜ்' அணிந்து கடந்த இரண்டு நாட்களாக
பள்ளியில் பங்கேற்கின்றனர். காலையில் நடக்கும் இறைவணக்கத்தில் அன்னா
ஹசாரேவுக்கு ஆதரவளிப்போம், ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம் என, உறுதிமொழி
எடுத்துக் கொண்டனர்.இது குறித்து தாளாளர் கனகசபை, முதல்வர் ஜெயபிரகாஷ்
கூறியது:மாணவர்களிடம் ஊழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்
உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து, மாணவர்கள்
பேட்ஜ் அணிந்துள்ளனர். காலையில் இறைவணக்கத்தில் அன்னா ஹசாரே குறித்தும்,
அவரின் லோக்பால் மசோத குறித்தும் 5 நிமிடம் சிறப்பு வகுப்பும் நடந்து
வருகிறது. பல மாணவ, மாணவிகள் கறுப்பு பணம் குறித்து ஆசிரியர்களிடம் கேள்வி
கேட்டு வருகின்றனர், என்றார். ஊர்வலம்: ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்தும்,
ஜன் லோக்பால் மசோதவை அமல்படுத்த கோரியும் ஜி.டி.என்., கல்லூரி மாணவர் பேரவை
தலைவர் சுதர்சன் தலைமையில் ஊர்வலம் நடந்தது.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் துவங்கி ஆர்.டி.ஓ., அலுவலகம்
சென்றது. ஆர்.டி.ஓ.,விடம் மனு அளிக்கப்பட்டது. உண்ணாவிரதம்: ஹசாரேவுக்கு
ஆதரவாக தாண்டிக்குடி கிராம வளர்ச்சி சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள்
உண்ணாவிரதம் இருந்தனர்.சங்க தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். பொருளார்
பண்டாரம் முன்னிலை வகித்தார். கோவிந்தசாமி தொடங்கி வைத்தார். சமூக
ஆர்வலர்கள் மோகனசுந்தரம், சுப்ரமணி, ரவிசந்திரன், கண்ணாயிரம், தினேஷ்கண்ணா,
சுப்ரமணி பேசினர். செயலாளர் முத்துராமன் முடித்து வைத்தார்


