ADDED : ஆக 25, 2011 01:52 AM
ஊட்டி : ஊட்டி பிலோமினா பள்ளியில்மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.ஊட்டி
நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்தனன் தலைமை வகித்தார்.
கூடலூர்
நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் முகாமினை துவக்கி
வைத்தார். நீலகிரி தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் ஜேபி, நீலகிரி மாவட்ட
பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்டமேலாளர் டாக்டர்.அமராவதிராஜன், பள்ளி
தலைமையாசிரியர் சந்தா உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முகாமில், 9
பேருக்கு பார்வை பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஊட்டி
மருத்துவ னைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.


