Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சவெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ரூ.5.40 லட்சம் மோசடி: பெண் கைது

சவெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ரூ.5.40 லட்சம் மோசடி: பெண் கைது

சவெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ரூ.5.40 லட்சம் மோசடி: பெண் கைது

சவெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ரூ.5.40 லட்சம் மோசடி: பெண் கைது

ADDED : ஆக 27, 2011 10:58 PM


Google News
சிவகங்கை : வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 5.40 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண்ணை, சிவகங்கை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வித்தானூரை சேர்ந்தவர் லட்சுமி,36. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,அவரை பிரிந்து சிவகங்கையில் மணிமேகு என்பவரை 2வது திருமணம் செய்தார்.மஜீத் ரோட்டில் வாடகைக்கு வீடு பிடித்து, சேலை வியாபாரம் செய்தார். இதன் மூலம் காமராஜர் காலனியை சேர்ந்த அழகர்சாமி மனைவி பஞ்சவர்ணத்துடன் பழக்கம் கிடைத்தது. அழகர்சாமியை வெளிநாடு அனுப்புவதாக கூறி, 5.40 லட்ச ரூபாய் பெற்றார். ஆனால், சொன்னபடி அனுப்ப இல்லை, பணத்தையும் தரவில்லை. பன்னீர்செல்வம் எஸ்.பி.,யிடம் பஞ்சவர்ணம் புகார் அளித்தார். சிவகங்கை இன்ஸ்பெக்டர் சங்கர், நவநீதன் எஸ்.ஐ., மோசடி செய்த லட்சுமியை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us