ஹசாரேதான் நிஜமான ஹீரோ:சொல்கிறார் நடிகர் அமீர்
ஹசாரேதான் நிஜமான ஹீரோ:சொல்கிறார் நடிகர் அமீர்
ஹசாரேதான் நிஜமான ஹீரோ:சொல்கிறார் நடிகர் அமீர்
ADDED : ஆக 27, 2011 11:55 PM

புதுடில்லி:'அன்னா ஹசாரேதான் நிஜ ஹீரோ' என்று பாலிவுட் நடிகர் ஆமீர் கான் கூறியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர் கான், நேற்று ஹசாரேவை சந்தித்து, போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:ஹசாரே தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், லோக்பால் மசோதா பார்லிமென்டில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது, இந்த போராட்டத்தின் முதல் பகுதிதான். இதன் உச்சக்கட்டம், வலுவான லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்றுவது. பொதுமக்கள், தாங்கள் ஓட்டளித்து தேர்ந்தெடுத்த எம்.பி.,க்களிடம் சென்று, ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதாவை ஆதரிக்குமாறு கேட்க வேண்டும். இதை ஒவ்வொரு இந்தியனும், தங்கள் எம்.பி.,க்களிடம் கேட்க வேண்டும். நான் எனது தொகுதி எம்.பி., பிரியா தத்தை சந்தித்து, ஜன் லோக்பால் மசோதாவை ஆதரிக்குமாறு கேட்கப் போகிறேன். ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரேதான் நிஜ ஹீரோ. நான் அல்ல.
இவ்வாறு ஆமீர் கான் கூறினார்.


