/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாரதியார் பல்கலையில் புதிய பட்டயப்படிப்புபாரதியார் பல்கலையில் புதிய பட்டயப்படிப்பு
பாரதியார் பல்கலையில் புதிய பட்டயப்படிப்பு
பாரதியார் பல்கலையில் புதிய பட்டயப்படிப்பு
பாரதியார் பல்கலையில் புதிய பட்டயப்படிப்பு
ADDED : ஆக 28, 2011 12:41 AM
கோவை : பாரதியார் பல்கலை உயிரி தகவலியல் துறையில் வேதித்தகவலியல் எனும் ஓராண்டு பட்டயப்படிப்பு துவக்க விழா மற்றும் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது.பாரதியார் பல்கலைக்கழக மானியக் குழு உதவியுடன் இப்பட்டய படிப்பு துவங்கப்பட்டுள்ளது.
துறை தலைவர் சுவாமிநாதன் வரவேற்றார். பேராசிரியர் மணியன் தலைமை வகித்தார். லக்னோ இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானி பிரபாகர் வாழ்த்துரை வழங்கினார்.கொல்கத்தா இந்திய தேசிய வேதி அறிவியல் துறை முதுநிலை விஞ்ஞானி தேபாசிஸ் பட்டாச்சாரியா பேசியது: வேதித்தகவலியல் படிப்பானது தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. மருந்தியல் வடிவமைப்பு மற்றும் புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு உள்ளிட்ட மருத்துவ துறைகளில்,வேதித்தகவலியல் பயனுள்ளதாக உள்ளது.இப்படிப்பு வேதித் தனிமங்கள் எந்த வகையில் மருத்துவத்துக்கு பயன்படுகிறது என்பதை அறிய இப்படிப்பு மிக உதவியாக இருக்கும். மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் துறை மட்டுமல்லாது, வெளிநாடுகளில் வேதித்தகவலியல் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும். சிறிய தனிமங்களை பிரித்து, மூலப்பொருட்களை வடிவமைக்கும் உயிரி தகவலியல் படிப்பு குறித்து மாணவர்கள் அறிவது அவசியம், என்றார். ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல் நன்றி கூறினார்


