ADDED : ஆக 28, 2011 01:14 AM
சேலம்: உலகத்தமிழர் பண்பாட்டுக் கழக செயற்குழு கூட்டம், சேலத்தில் நடந்தது.
கவிஞர் இளந்திரையன் தலைமை வகித்தார். நிறுவனர் சோலை இருசன், பொதுச்செயலாளர் மல்லை ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழ்ப்புலவர்கள், 500 பேர் கூடி ஆராய்ந்து, தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தனர். அதை மாற்றியிருப்பது தமிழ் மக்களை வேதனைப்படுத்தி உள்ளது. மீண்டும், தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


