/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/முத்தாயம்மாள் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழாமுத்தாயம்மாள் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
முத்தாயம்மாள் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
முத்தாயம்மாள் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
முத்தாயம்மாள் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
ராசிபுரம்: ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில், முதலாமாண்டு பி.இ., பட்ட வகுப்பு துவக்க விழா நடந்தது.
ராயல் சாஃப்ட் சர்வீசின் முதன்மை செயல் அதிகாரி கிங்ஸ்டன் பங்கேற்று பேசியதாவது: தற்போது நிலவும் தகவல் தொழில்நுட்பத்துறையின் வேலைவாய்ப்புக்கு, மாணவர்கள் முதலாமாண்டு முதலே தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தங்கள் திறமையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் மொழியில் சிறந்து விளங்கினால் மட்டுமே தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு பெறமுடியும். மேலும், மாணவர்கள் ஆங்கிலத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய போட்டிகள் நிறைந்த சூழலில், நாம் வெற்றி பெற ஒருதுறை சார்ந்த அறிவு மட்டும் போதாது, பல்துறை சார்ந்த அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் மாதேஸ்வரன், துறைத்தலைவர் அசோக்குமார், வேலைவாய்ப்பு பயிற்சி அலுவலர் தியாகராஜன், டிரஸ்ட் நிர்வாகி அம்மணி உட்பட கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர்.


