/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வங்கி வராக்கடன் ரூ. 6 லட்சம் வசூல்வங்கி வராக்கடன் ரூ. 6 லட்சம் வசூல்
வங்கி வராக்கடன் ரூ. 6 லட்சம் வசூல்
வங்கி வராக்கடன் ரூ. 6 லட்சம் வசூல்
வங்கி வராக்கடன் ரூ. 6 லட்சம் வசூல்
ADDED : ஆக 30, 2011 12:21 AM
காரமடை : காரமடை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி விழிப்புணர்வு முகாம் அமைத்ததில், 6 லட்சம் ரூபாய் வராக்கடன் வசூல் ஆனது.வராக்கடன் வசூல் முகாமை, கோவை மண்டல துணை பொது மேலாளர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்.
உதவி பொது மேலாளர் ராமநாதன், அலுவலக அதிகாரி ரமேஷ், காரமடை வங்கி மேலாளர் அருணாசலம் உள்ளிட்டோர் கிராமம், கிராமமாக சென்று, வங்கியில் கடன் பெற்றவர்களிடம் திருப்பி செலுத்தும்படி விளக்கினர். இது குறித்து வங்கி காரமடை கிளை சீனியர் மேலாளர் அருணாசலம் கூறியது: காரமடை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் விவசாயிகள், தொழில் அதிபர்கள், மாணவர்களுக்கு என 61 கோடி ரூபாய்க்கு பலவகையான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. முறையாக திருப்பி செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து கடன் வழங்கப்படுகிறது. சிலர் கடனையும், வட்டியையும் அரசு தள்ளுபடி செய்யும் என அஜாக்கிரதையாக இருந்து வருகின்றனர். இது மாதிரி பலர் இருந்தால், அடுத்தவர்களுக்கு கடன் கொடுப்பதில் பல இடர்கள் ஏற்படுகின்றன. இக்கிளையில் 50 லட்சம் ரூபாய் வராக்கடனாக உள்ளது. ஊழியர்கள் கிராமங்களுக்கு சென்று இரண்டு நாள் வசூலில் ஈடுபட்டனர். அதில், 6 லட்சம் ரூபாய் கடன் வசூலானது, என்றார்.


