/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாற்றுவழிப்பாதை சீரமைப்பு பணி துவக்கம்மாற்றுவழிப்பாதை சீரமைப்பு பணி துவக்கம்
மாற்றுவழிப்பாதை சீரமைப்பு பணி துவக்கம்
மாற்றுவழிப்பாதை சீரமைப்பு பணி துவக்கம்
மாற்றுவழிப்பாதை சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : ஆக 30, 2011 12:29 AM
வால்பாறை : வால்பாறை அருகே நல்லகாத்து செல்லும் மாற்றுவழிப்பாதை சீரமைக்கும் பணி துவங்கியது.
வால்பாறையிலிருந்து முடீஸ் செல்லும் வழியில் உள்ளது நல்லகாத்து ரோடு. இரண்டு கிலோ மீட்டர் தூரமே உள்ள இந்த ரோடு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி சார்பில் கான்கீரீட் ரோடு போடும் பணி கடந்த ஒரு ஆண்டாக ஆமை வேகத்தில் நடக்கிறது.தற்போது மழை பெய்து வருவதால் ரோடுபணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே முடீஸ் வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுவழிப்பாதையில் (தனியார் எஸ்டேட் ரோடு) சென்று வருகிறது. இந்த ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால் இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.இதனிடையே பழுதடைந்துள்ள இந்த ரோட்டை சமன்படுத்தக்கோரியும், நல்லகாத்து ரோட்டை விரைவில் சீரமைக்க கோரியும் கடந்த 27ம் தேதி சோலையார் குருவம்பாடியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது அதிகாரிகள் பொதுமக்களிடம் அளித்த வாக்குறுதிபடி முதல் கட்டமாக நல்லகாத்து மாற்றுவழிப்பாதை சமன்படுத்தும் பணி நடைபெற்றது. நகராட்சி சார்பில் செய்யப்படும் இந்தப்பணியை வால்பாறை தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், நகராட்சி செயல்அலுவலர் சுப்பிரமணி, அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் சுரேஷ்குமார் பார்வையிட்டனர்.


