டாஸ்மாக் மதுக்கடையை மாற்றக்கூடாது: ஐகோர்ட்
டாஸ்மாக் மதுக்கடையை மாற்றக்கூடாது: ஐகோர்ட்
டாஸ்மாக் மதுக்கடையை மாற்றக்கூடாது: ஐகோர்ட்
ADDED : ஆக 30, 2011 03:21 AM
மதுரை:மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலை அருகே செயல்படும் அரசு டாஸ்மாக் மதுக்கடையை (எண்: 5220) மாற்றுவதை எதிர்த்து தாக்கலான மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, தற்போதைய நிலை தொடர உத்தரவிட்டது.மதுரை ஞான வேல்தெருவை சேர்ந்த இமானுவேல் தாக்கல் செய்த பொது நல வழக்கு:
தெப்பக் குளம் மருதுபாண்டியர் சிலைக்கு பின்புறம் டாஸ்மாக் கடை செயல்படுகிறது.
அதை தெப்பக்குளம் தென் கிழக்கு மூலைக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அங்கு ஏற்கனவே தியாகராஜர் மாடல் மேல் நிலை பள்ளி,பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் குடியிருப்புகள் உள்ளன. அங்கு மதுக்கடை திறந்தால்,குடிமகன் களால்,தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்.தற்போது செயல்படும் இடத்திலிருந்து மதுக்கடையை மாற்ற கூடாது, என தெரிவிக்கப்பட்டது.வழக்கு நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.ஸ்டிரைக் காரணமாக மனுதாரர் வக்கீல் சேவுகராஜா ஆஜராகில்லை.மனுதாரரே ஆஜராகி வாதாடினார். நீதிபதி கள், ''மனுதாரர் மனுவை கலெக்டர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மதுக்கடையை மாற்ற கூடாது. தற்போதைய நிலை தொடர வேண்டும்,'' என உத்தரவிட்டனர்.


