ADDED : ஆக 30, 2011 11:30 PM
புதுச்சேரி : சுத்துக்கேணி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். லட்சுமி நாராயணா மருத்துவமனை டாக்டர்கள் ஆனந்தராஜா, திவாரி, அன்புக்கரசி ஆகியோர் சிறப்புரையாற்றி, தொற்று நோயை தடுக்கும் வழிமுறைகள் குறித்து படக்காட்சிகளுடன் விளக்கினர்.நிகழ்ச்சியில் சமுதாய நலப்பணித் திட்டத்தில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சமுதாய நலப்பணித் திட்ட அலுவலர் அந்தோணிசாமி செய்திருந்தார்.


