/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பாவை வித்யாஷ்ரம் பள்ளியில் சதுர்த்தி விழாபாவை வித்யாஷ்ரம் பள்ளியில் சதுர்த்தி விழா
பாவை வித்யாஷ்ரம் பள்ளியில் சதுர்த்தி விழா
பாவை வித்யாஷ்ரம் பள்ளியில் சதுர்த்தி விழா
பாவை வித்யாஷ்ரம் பள்ளியில் சதுர்த்தி விழா
ADDED : ஆக 31, 2011 01:07 AM
ராசிபுரம்: ராசிபுரம் பாவை வித்யாஷ்ரம் பள்ளியில், ரம்ஜான் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கல்வி நிறுவன இயக்குனர் ராமசாமி தலைமை வகித்தார். இயக்குனர் செந்தில், பள்ளி முதல்வர் சாந்தலஷ்மி ஆகியோர் முன்னிலை வகிவத்தனர். ஆங்கில ஆசிரியர் சுமிஅஜீஸ் ரமலானின் சிறப்புகள் பற்றி விளக்கினார். ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் மூன்று விதமான நோன்பு குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து தமிழாசிரியர் நித்யா, விநாயகர் சதுர்த்தி உருவான கதையையும், விநாயகரை முழுமுதற் கடவுளாக வணங்குவதற்கான காரணம் குறித்தும் பேசினார். விழாவை முன்னிட்டு, பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் செய்தனர்.


